பாடசாலை மாணவர்களுக்கான வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் விசேட வைத்திய அதிகாரிகளின் அறிவுருத்தளுக்கையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பான சுற்றுநிருபம் சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.

