அட்டாளைச்சேனை விபத்தில் ஒருவர் மரணம்




(அகால மரணத்துடனான புகைப்படத்தினை வெளியிட முடியாமைக்கு வருந்துகின்றோம்)

-எஸ்.ரி.ஜமால்டீன்-

அட்டாளைச்சேனை மார்கட் முன் பிரதான வீதியில் இன்று (20) காலை 6.45 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிர் இழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தொரிவித்தனர்.
உயிர் இழந்தவர் 68 வயதுடைய உதுமான் கண்டு அப்துல் றஸீட் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும்  பொலிசார் தெரிவித்தனர்.
திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து ஒலுவில் நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முற்பட்ட வயோதிபரை அட்டாளைச்சேனை பிரதான வீதியில் மோதியதிலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிர் இழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த ரி.கிருஷாந்தன் (21வயது), பின்னால் இருந்து வந்த எஸ்.தனுசன் (22வயது) ஆகிய இரு இளைஞர்களும் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இரு இளைஞர்களும் திருக்கோவில் 4 ஆம்பிரிவைச் சோ்ந்தவர்கள்.

இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் போக்குவரத்து பிரிவினர் நேற்;று (20) காலை வைத்திய சாலைக்கு சென்று  விசாரணைகளை மேற்கொண்டனர்.