அம்பாறை மாவட்டம், ஒலுவில் கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கடற்படை
வீரர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திம்புலாகல பகுதியைச் சேர்ந்த நுவான் றோஹன பண்டார (வயது 32) எனும் வீரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கடற்படை வீரர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்