துருக்கியில் இருந்து பிரான்சுக்கு பெண் ஒருவர் தனது நான்கு வயது குழந்தையை , கையில் எடுத்துவரும் பெட்டியில் வைத்து விமானத்தில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அந்தப் பெண்ணின் காலடியில் வைத்திருந்த அந்தப் பை அசைய ஆரம்பித்ததை அடுத்து, அந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் சென்ற சக பயணிகள் அதைக் கண்டுபிடித்தனர்.
பிரான்ஸில் வசித்து வரும் அந்தப் பெண், ஹைத்தியைச் சேர்ந்த இந்தக் குழந்தையை தத்தெடுக்க முயன்று கொண்டிருக்கிறார் என்றும், ஆனால் அதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்றும் கருதப்படுகிறது.
இஸ்தான்புல்லில் அவர் பயண மாற்றும் பகுதியில் ( ட்ரான்ஸிட் பகுதி) இருந்த அந்தப் பெண்ணை முதலில் அவர் செல்லவிருந்த விமானத்தில் குழந்தையுடன் ஏறவிடாமல் தடுத்திருக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. பின்னர் அவர் ஒரு புதிய டிக்கெட்டை வாங்கிக்கொண்டு குழந்தையை பெட்டியில் வைத்து மறைத்துக் கொண்டு , அந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் ஏறியிருக்கிறார்.
இந்தக் குழந்தையை இப்போது சமூக நலத்துறையின் காப்பகம் ஒன்றுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்தப் பஎண் பாரிஸ் விமான நிலையத்த்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் மீது குற்ற வழக்கு எதுவும் பதியப்படவில்லை.