மலைநாட்டில் ஒரு லட்சம் பேருக்கு மலசலகூட வசதிகள் கிடையாது - பிரதமர் ரணில்




மத்திய மலைநாட்டில் ஒரு லட்சம் பேருக்கு மலசலகூட வசதிகள் கிடையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்டங்களில் வாழும் மக்களுக்கு வசதிகள் கிடையாது, ஒரு லட்சம் பேருக்கு மலசலகூட வசதிகள் இல்லை.
யாழ்ப்பாணத்தில் சிலருக்கு வீடுகள் கிடையாது, தெற்கில் சிலருக்கு பூரண உரிமையுடைய காணிகள் கிடையாது.
பெருந்தோட்ட மக்களின் காணி, வீடு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.