வறிய குடும்பத்து பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெண்கள் தலைமை தாங்கும் வறுமைப்பட்ட 10 வறிய குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் புதன்கிழமை 16.03.2016 இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் வருடாந்த மாகாண சபை நிதி ஒதுக்கீட்டிலிருந்து தலா ஒவ்வொன்றும் 25 ஆயிரம ரூபாய் பெறுமதியான இந்தத் தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி. எம். சயீட், நகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.ஆர். பிரௌஸ் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.