குளியாப்பிட்டிய சிறுவனுக்கு கண்டி திருத்துவ கல்லூரியில் வாய்ப்பு




எயிட்ஸ் நோய் சர்ச்சையால் பாடசாலை கல்வியை இழந்த குளியாபிட்டிய மாணவனை, கண்டி திருத்துவ கல்லூரியில் இணைந்துகொள்வது தொடர்பில்
உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் பாடசாலை அதிபருக்கு இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை குறித்த சிறுவனின் கல்விக்கான அனைத்து செலவுகளையும் ஏற்பதற்கும் திருத்துவக் கல்லூரி இணங்கியுள்ளது. மேலும் சிறுவனுடன் அவரது தாயாரும் கண்டி பிரதேசத்தில் வாழ்வதற்கான வசதிகளை கல்வி அமைச்சு ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது