பன்டாரகம வாகன விபத்தில் 12 பேர் காயம்



பன்டாரகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
பன்டாரக பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து பன்டாரகம நோக்கி பயணித்த கெப் வண்டியும்,ஹொரண நோக்கி பயணித்த வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்துக்குள்ளான வாகனங்களில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில் பன்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்