15% VAT வரி அதிகரிப்பு மே 2 ல்



பெறுமதி சேர் வரி (VAT) 15% அதிகரிப்பு எதிர்வரும் மே மாதம் 2 அம் திகதி முதல் அமுல் படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் குறித்த வரி அதிகரிப்பு அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்யாணி தஹநாயக்க ஏப்ரல் 01ம் திகதியன்று வெளியிட்ட அறிக்கையில் மறு அறிவித்தல் வரும் வரை ஏற்கனவே இருந்தது போன்று 11% ஆக பெறுமதி சேர் வரி இருக்கும் என அறிவித்தார்.
இந்நிலையிலேயே இடைநிறுத்தப்பட்டிருந்த வெட் வரி அதிகரிப்பு மீண்டும் மே மாதம் 2ம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பானது சுகாதார துறை மற்றும் தொடர்பாடல் துறைகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.