15% VAT வரி : பொது மக்களுக்கு எந்த வித அநீதியும் இழைக்கப்படாது



சாதாரண பொது மக்களுக்கு சுமையாக அமையும் எந்தவொரு வரி விதிப்பும் மேற்கொள்ளப்பட மாட்டாதென ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
வற் வரி திருத்தத்திற்கு அரசு தயாராவதாக அண்மையில் ஒருசில ஊடகங்கள் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் ஏழை பொது மக்களுக்கு இன்னல் தரும் எந்தவிதமான வரி அதிகரிப்பிற்கும் தான் இடமளிக்கப்போவதில்லையெனத் தெரிவித்தார்.
அவ்வாறான யோசனைகளை முன் வைக்கும் பொருளியல் நிபுணர்கள் இருப்பார்களாயின் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதை விடுத்து நாட்டின் பொருளியல் பொருளாதார வேலைத்திட்டத்திற்கு அவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு தான் தயார் இல்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மலர்ந்த தமிழ், சிங்கள புதுவருடத்திற்காக புலத்திசிபுர மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு இன்று (18) முற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
பொதுமக்களின் அரசாங்கம் என்ற ரீதியில் பொதுமக்களுக்கு கூடுதலான பொருளாதார நன்மைகளை வழங்கி அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தற்போதைய அரசின் கொள்கையாகுமென ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிபால கம்லத், நாலக்க கொலொன்னே, சிட்னி ஜயரத்ன, ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான புலத்திசிபுற மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.