சித்திரைப் புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையில் இடம்பெற்ற 49 விபத்துக்களில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஆண்டு புது வருட காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் சுமார் 88 பேர் வரை உயிரிழந்திருந்தனர். இது 36 வீதத்தினால் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

