அரச பாடசாலைகளுக்கு நாடளாவிய ரீதியில் புதிய அதிபர்கள் 3779 பேர் அடுத்த மாதம் நியமிக்கப்படவுள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களது எண்ணிக்கை 760 ஆகும். மத்திய மாகாணத்திற்கு 584 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.
தென் மாகாணத்துக்கு 532 பேரும், வட மேல் மாகாணத்துக்கு 427 பேரும், சப்ரகமுவ 252 பேரும், வடக்கு 380 பேரும் கிழக்கு 338 பேரும் இவ்வாறு அதிபர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சுமார் 18 ஆயிரம் பேர் தோற்றினர். இதில் 4079 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 300 பேர் நேர்முகப் பரீட்சையில் சித்திபெறத் தவறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

