புத்தாண்டு தினங்களில் (13,14,15) தெற்கு அதிவேக பாதையினால் கிடைக்கப் பெற்ற வருமானம் 3 கோடி ரூபாவையும் தாண்டியுள்ளதாக அதிவேகப் பாதையின் முகாமைத்துவப் பணிப்பாளர் சமன் ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று தினங்களிலும் தெற்கு அதிவேக பாதையில் 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் பயணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்றல் 15 ஆம் திகதி மாத்திரம் ஒரு கோடியே 76 லட்சம் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.
