முச்சக்கரவண்டிகளுக்கும் ஆசனப் பட்டி !



விபத்துக்களை குறைத்துக் கொள்ளும் நோக்கில் முச்சக்கரவண்டிகளுக்கான பாதுகாப்பு பட்டிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோத்தாகொட குறிப்பிட்டுள்ளார்.
விபத்துக்களின் போது முச்சக்கரவண்டியில் பயணிப்போர் வெளியில் தூக்கி எறியப்படுவதால் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும் டாக்டர் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பட்டியோ அல்லது பொருத்தமான பாதுகாப்பு முறையொன்றையோ அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.