அட்டாளைச்சேனை நயீமாவின் ஜனாசா சனியன்று கிடைக்கலாம்



File Photo)
2வது இணைப்பு
இன்று அரை நாள் விடுமுறை என்பதாலும், நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றங்கள் மூடப்படுவதனாலும் சனியன்றே நீதிமன்றம் மூலம் ஜனாசாவை நல்லடக்கம் செய்ய அனுமதி கிடைக்கும் என எதிர்பார்கப்படுகின்றது.


பின்னிணைப்பு-
கத்தாரில் இருந்து சற்று முன் கிடைத்த தகவலில் 04 பிள்ளைகளின் தயாரான இவர்,  இறந்த சோதரி லொயிற்ஸ் குடும்பத்தின் கடைசிப் புதல்வியென்பதாகத் தெரிவித்துள்ளார்.
லொயிற்ஸ் குடும்பத்தவருடன்  CEYLON24 தொடர்பு கொள்ள முயற்சித்தும் இணைப்பில் இல்லை. அவர்கள் ஜனாசாவைப் பார்ப்பதற்கு சாஜா சென்றுள்ளனர்.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!


முந்திய செய்தி
அட்டாளைச்சேனை சேர்ந்தவரும் ஹபுகஸ்தலாவையில் மணமுடித்து வாழ்ந்து வந்தவருமான  ஆலிமா நயீமா ஒஸ்மான்(வயது40) சாஜாவில் அகால மரணமானார்.

தமது வசிப்பி் 16வது மாடியில் இருந்து வீழ்ந்ததால் இவர் மரணித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.இவரது கணவர் ராசீத்துடன் சாஜாவிலும் வாழ்ந்தும் வந்துள்ளார்.ஜனாசா அல் கசிமி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸதர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.