புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் இரு வகையான விளையாட்டுக்களை நடாத்த பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.
மாட்டு வண்டி ஓட்டம், யானை ஓட்டம் என்பனவற்றையே நடாத்தக் கூடாதென பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
மிருக வதைத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றுநிருபமொன்று சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபரினால் கடந்த மாதம் 30 ஆம் திகதியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

