சிங்கள புத்தாண்டு தினங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கல் என்பன துண்டிக்கப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
புத்தாண்டு தினங்களில் எந்தவித தடங்களும் இன்றி மின்சாரம், நீர் என்பனவற்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இருப்பினும், சில பிரதேசங்களில் இந்த சேவைகள் செயலிழந்து காணப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புத்தாண்டு தினத்தில் கொஸ்லந்த மற்றும் தங்கல்ல ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, அங்குள்ள மக்கள் மின்சாரம் மற்றும் குடிநீர் என்பனை தங்களுக்கு தடைப்பட்டுள்ளதாக பிரதமரிடம் நேரடியாக முறைப்பாடு செய்திருந்ததாகவும் பிரதமர் செயலகம் மேலும் அறிவித்துள்ளது.
