17 வயது மாணவி 24 வயது இளைஞனால் கொலை,சந்தேகநபருக்கு விளக்கமறியல்



வந்துரப பிடிஹராவ பிரதேசத்தில் 17 வயது மாணவியை கொலை செய்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நபரை எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்தேகம பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிபதி சந்திம எதிரிசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சந்தேக நபர் 24 வயதுடைய அப்பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. கூர்மையான ஆயுதமொன்றினால், குறித்த மாணவியை கடந்த 10 ஆம் திகதி கொலை செய்திருந்தார்.
கொலை செய்யப்பட்ட மாணவி கைது செய்யப்பட்ட நபரின் காதலி எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.