புதிய பொலிஸ் மா அதிபர் தெரிவில் சர்ச்சையை ஏற்படுத்த கூட்டு எதிர்க் கட்சி முயற்சிக்கின்றது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் தெரிவுகளுக்கு ஏற்ப முன்மொழியப்பட்டுள்ள மூவர் அடங்கிய பொலிஸ் மா அதிபருக்கான குழுவிலிருந்து ஒருவரை அரசியலமைப்புச் சபை அதன் அதிகாரங்களுக்குட்பட்டு தெரிவு செய்துள்ளது.
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபரும் அந்த மூவரடங்கிய குழுவில் ஜனாதிபதியின் சிபார்சுக்குட்டவரே. இவரை தெரிவு செய்யக் கூடாது என்றிருந்தால், ஜனாதிபதி அவரை முன்மொழிவுக் குழுவில் சேர்த்திருக்க மாட்டார்.
மஹிந்த குழுவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில எழுப்பியுள்ள சர்ச்சை தொடர்பில் பதிலளிக்கையில் நிதி அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தெரிவில் 19 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் மீறப்பட்டுள்ளதாக உதய கம்மம்பில குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

