பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட பூண்டுலோயா கைப்புகல தோட்ட குடியிருப்பில் இன்று (12) காலை 10 மணியளவில் தொடர் வீட்டுப் பகுதியில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவ்வீட்டில் உபகரணங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் அயலில் உள்ளவர்களால் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேவேளை இது தொடர்பாக பூண்டுலோயா பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய விசாரணகளை மேலதிக மேற்கொண்டு வருகின்றனர். (கி|ஸ)

