மைத்திரி – விக்னேஸ்வரன் சந்திப்பு ரத்து



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையில் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் திடீர் சுகயீனத்துக்கு உட்பட்டமையே இதற்கான காரணமாகும்.
வடக்கில் நிலவும் காணி பிரச்சினை தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட இருந்த அதேவேளை, இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்துகொள்ளவிருந்தமை குறிப்பிடத்தக்கது.