அதிவேக நெடுஞ்சாலையில் 24 மணித்தியாலங்களில் 18 மில்லியன் வருமானம்



கடந்த 24 மணித்தியாலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக 57,000 க்கும் அதிகமான வாகனங்கள் சென்றுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். ஒபநாயக தெரிவித்தார்.
இதன் மூலம் சுமார் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்ட பின்னர் குறைந்தளவு விபத்துக்கள் பதிவு செய்யப்பட்ட தமிழ் – சிங்கள புத்தாண்டு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.