எதிர்வரும் மே தினத்தன்று நடைபெறப் போவது கட்சிக் கூட்டமன்று. தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான கூட்டமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் மறுக்கப்படும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அரசாங்கத்திற்கு ஆதரவான கட்சியினால் நடாத்தப்படும் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு வென்றெடுக்க முடியாது. இதனாலேயே நாம் வேறு மே தினம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
எனது முன்னைய ஆட்சிக் காலங்களில் நடைபெற்ற மே தினக் கூட்டங்களில், நான் கட்சியின் நிறத்தில் சேர்ட் அணிவது கிடையாது. சிவப்பு நிறத்தில் தான் அணிவேன். ஏனெனில், அது தொழிலாளர்களின் தினம் என்பதனால் ஆகும்.
சுதந்திரக் கட்சியின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், செல்வீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவியபோது,
நான் திருமணம் ஒன்றை நடாத்த பொறுப்பெடுத்துள்ளேன். இதனால், அதே தினத்தில் நடைபெறும் வேறு ஒரு திருமணத்துக்கு விடுக்கப்படும் அழைப்பை என்னால் ஏற்க முடியாது. எனது வீட்டுத் திருமணத்தை நடாத்துவதை விட்டு விட்டு வேறு ஒரு வீட்டுத் திருமணத்துக்கு எப்படிச் செல்வது? எனவும் அவர் நேற்று பதிலளித்தார்.

