ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர பதிவுத் தபாலில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.
இந்த கடிதம் அவருக்கு பெக்ஸ் மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் தலைவராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஒத்துழைப்பு, எதிர்வரும் தேர்தல்களிலும் கட்சிக்கு அவசியம் எனவும் அவருக்கு அனுப்பிய அழைப்பிதலுடன் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
