முதல்வர் விக்னேஷ்வரனை உடன் கைது செய்க



வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனை உடன் கைது செய்யுமாறு சிங்கள ராவய அமைப்பு மேலதிக பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனியான நாடாக உருவாக்கப்பட வேண்டும் என அவர் விடுத்துள்ள அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் புதிய பொலிஸ் மா அதிபருக்கும் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.