இலங்கையின் புதிய பொலிஸ்மா அதிபர் பதவிக்கு முன்னாள் மூத்த துணைப் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பெயர் அரசியலமைப்பு பேரவையினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் 34-வது காவல்துறை தலைவராக பூஜித் ஜயசுந்தரவை ஜனாதிபதி நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் ஓய்வுபெற்றதை அடுத்து, அந்த வெற்றிடத்துக்கு மூன்று பேரின் பெயர்கள் அரசியலமைப்பு பேரவையிடம் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
எஸ்.எம். விக்ரமசிங்க, பூஜித் ஜயசுந்தர மற்றும் சந்தன விக்ரமரத்ன ஆகிய மூன்று துணை பொலிஸ்மா அதிபர்களிலும் பூஜித் ஜயசுந்தரவின் பெயரை அரசியலமைப்பு பேரவை ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்துள்ளது.

