கட்சி மற்றும் கட்சித் தலைமை என்பவற்றை தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டு கட்சியின் வெற்றிப் பயணத்துக்கு தடைக்கல்லாக இருக்கும் கட்சி உரிமையைப் பெற்றுள்ள சிரேஷ்ட சூழ்ச்சிக்காரர்கள் 10 பேரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
கட்சியை மறுசீரமைத்து பலப்படுத்தும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டு வரும் நிலையில், இடையிலுள்ள இந்தக் குழு அந்தப் பணியை உடைப்பதற்கு செயற்பட்டு வருவதாக இவர்களுக்கு எதிராக முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வெளிநாட்டு விஜயத்தை முடித்துக் கொண்டு வந்தவுடன் இவர்களுக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இன்றைய ஞாயிறு பத்திரிகையொன்றுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

