சீரற்ற காலநிலை இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ளது. காலநிலை வலுப்பெற்று வருவதாக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. அடுத்து வரும் 36 மணி நேரத்தில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்தும் எதிர்பார்க்க முடியும்.
இதனால் நாடு முழுவதிலும் இதன் தாக்கம் அதிகரித்து காணப்படும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும், இதனால் கடல் கொந்தளிப்பானது சற்று அதிகரித்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

