யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று வீடொன்றில் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஆர் சேனநாயக்க தெரிவித்தார்.
இதன்போது 48 வயதுடைய விபுலானந்தா வீதியை சேர்ந்தஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
6 பார்சல்களாக பொதி செய்யப்பட்ட நிலையில் கேரளா மொழி பத்திரிகையினால் இக்கஞ்சா பக்கட்டுக்கள் சுற்றப்பட்டிருந்தன.
மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி ரூபா 20 இலட்சத்திற்கு அதிகமானது என நம்பப்படுகின்றது.

