தமிழகத்தில் அ.தி.மு.க. 130க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னதாக முதல்வரை தொலைபேசியில் அழைத்து, தனது வாழ்த்துக்களைக் கூறியதாக ட்விட்டர் பக்கத்தில் மோதி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

