சூசானா முஷாட் ஜோன்ஸ் என்ற இந்த மூதாட்டி 1899ம் ஆண்டில் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஒரு பண்ணையில் பிறந்தார். கடந்த பல நாட்களாக அவர் உடல் நலமின்றி இருந்தார் என்று மருத்துவர்கள் கூறினர்.
அவரது மறைவுக்குப் பின்னர் தற்போது, அவரைக் காட்டிலும் சில மாதங்களே இளையவரான , எம்மா மொரானோ என்ற இத்தாலியப் பெண்மணிதான் உலகின் மிக மூத்தவர் என்ற பட்டத்தை சுமக்கிறார்.
அவர்தான் 19ம் நூற்றாண்டில் பிறந்து இன்னும் உயிருடன் இருக்கும் கடைசி நபர் என்று கருதப்படுகிறது

