லுணுகல முஸ்லிம் ம.வி. மதில் விழுந்ததில் 16 பேர் காயம்



லுணுகல முஸ்லிம் வித்தியாலயத்தில் இன்று (8) மாலை பிரத்தியேக வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே மதில் விழுந்துள்ளதாகவும், இதில் காயமடைந்த 16 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லுணுகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதில் விழுந்ததனால் பாடசாலைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலை மோசமாக உள்ளதனால், பதுளை பெரியாஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.