மஹாவிலச்சிய கிருலகெட்டியாவ பிரதேசத்தில் இறந்த 4 யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதில் 3 யானைகுட்டிகளும் அடங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்தியர் உட்பட உத்தியோகத்தர்கள் விரைந்து சென்றனர்.
மின்னல் தாக்கத்தினால் இந்த 4 யானைகளும் இறந்திருக்கலாம் என வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் சந்தேகிக்கின்றனர்.

