28வது தேசிய விளையாட்டு போட்டியின் இறுதி நாள்



(க.கிஷாந்தன்)

அம்பகமுவ பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான 2016ம் ஆண்டிற்கான 28வது தேசிய விளையாட்டு போட்டியின் இறுதி நாள் போட்டிகள் 08.05.2016 அன்று நோர்வூட் மைதானத்தில் வைபவ ரீதியாக காலை 11.00 மணியளவில் ஆரம்பமானது.

அம்பகமுவ பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த போட்டிகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.

08.05.2016 அன்று நோர்வூட்டில் இடம்பெற்ற இறுதி நாள் போட்டிகளுக்கு பிரதம அதிதிகளாக மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில்ராஜ், உட்பட  மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி பழனி விஜயகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவனேசன், நுவரெலியா மஸ்கெலியா இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் சதிஷ்குமார் ஆகியோருடன் பலரும் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற அனைத்து கழகங்களுக்கும் பரிசில்கள் 08.05.2016 அன்றைய தினத்தில் வழங்கப்பட்டுள்ளது.