(க.கிஷாந்தன்)
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் நோர்வூட் விளையாட்டு மைதானத்தின் உடற்பயற்சி கூடம் மற்றும் ஏனைய விளையாட்டு பயிற்சிகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 08.05.2016 அன்று இடம்பெற்றது.
அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனை படி இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பளாருமாகிய சோ.ஸ்ரீதரன், கௌரவ அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார், பிரஜாசக்தியின் இயக்குநர் முத்துகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் ப.சிவனேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்களான கிறிஸ்டி மஞ்சுளா, கல்யாணகுமார், சுரேஸ், வாசு, ரமேஷ், ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த ஆட்சி காலத்தில் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் செயலிழந்து காணப்பட்ட உடற்பயிற்சி கூடம் திறந்து வைக்கப்பட்டு கட்சி இன பேதமின்றி அனைவரும் அதில் பயன்பெரும் வகையில் வழிசெய்ப்பட்டுள்ளது.
இந்த உடற்பயிற்சி கூடத்தில் காணப்பட்ட இயந்திரங்கள் கடந்த காலத்தில் காணாமல் போய், செயல்படாத நிலையில் பிரஜாசக்தி இயக்குநரின் முயற்சில் புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டு புத்துயிர் பெற்றுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

