கெட்டபுலா - கொலபத்தன கொங்கால பிரிவில் 30 தனி வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் 03.05.2016 அன்று நாட்டி வைக்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கடன் அடிப்படையில் இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
ஓவ்வொரு வீட்டிற்கும் 3 இலட்சம் ரூபா கடன் அடிப்படையில் வழங்கப்படுவதோடு குறித்த தொகையை 10 வருடங்களில் மாதாந்தம் ரூபா 3030 வீதம் செலுத்தி முடிக்கப்பட வேண்டும்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வீட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
வீடமைப்பின் கட்டிட நிர்மாண பணிகளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுக்கும்.
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், சோ.ஸ்ரீதரன், முத்தையா ராமசாமி மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் கொத்மலை அமைப்பாளர் அசோக ஏரத் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.

