மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 8 விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் செயலகம் அறிவித்துள்ளது.
இதன்படி ஏறாவூர் டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு 50 இலட்ச ரூபாவும்,
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி விளையாட்டு மைதான புனரமைப்புக்கு 30 இலட்ச ரூபாவும், காத்தான்குடி நகர பொது விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு 20 இலட்ச ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும்
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொக்குவில் பகட்டுவான் விளையாட்டு மைதானம், வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பொது விளையாட்டு மைதானம், வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வாகரை பொது மைதானம், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெரிய கல்லாறு பொது மைதானம், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொக்கட்டிச்சோலை பொது மைதானம் ஆகியவற்றின் அபிவிருத்திக்காக தலா 2 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.