வங்கதேசத்தில் கடந்த இரண்டு நாட்களில் மின்னல் தாக்கி 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது.
பலியானவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் எனவும், அவர்கள் நெல்வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு உள்ளாயினர் என்றும் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் இருவர் தலைநகர் டாக்காவை சேர்ந்த மாணவர்கள் எனவும் கால்ப்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது அவர்களை மின்னல் தாக்கியுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மற்றொரு பதின்மவயது சிறுவன் மாம்பழங்களை எடுக்க சென்ற போது மின்னல் தாக்கி பலியாகியுள்ளார்.
வங்கதேசத்தில் இடிமின்னல் தாக்குதலால் உயிரிழப்புகள் ஏற்படுவது இயல்பு என்றாலும் இந்த ஆண்டு அது மிகவும் மோசமாக உள்ளது.
காடழிப்பு மற்றும் புவி வெப்பநிலை உயர்வடைந்துள்ளது ஆகியவை இதற்கு பொதுவான காரணங்களாக இருக்கலாம் என துறைசார் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

