உச்ச நீதிமன்றத்தின் ஊடாக கடந்த முன்று மாதங்களுக்குள் 300 வழக்குகள் துரிதமான முறையில் விசாரணை செய்யப்பட்டுள்ளதாக பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்தார்.
சட்டத்துறை என்பது இன்று பலரலும் வரவேற்கும் விதத்தில் காணப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
தொழிலாளர்கள் நியாயசபையில் உள்ள மாற்றங்களும் சர்வதேச தொழிலாளர்களின் நிலையும் என்னும் கருத்தரங்கு இன்று யாழ் ஜெட்வின் ஹோட்டலில் தொழில் உறவுகள் அமைச்சின் பிரதி செயலாளர் சுனில் அபயவர்த்தன தலைமையில் நடை பெற்றது.
இக்கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றி பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வழக்குகளை துரிதமாக நிறைவு செய்வதற்கான பல கட்ட வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
இன்றைய காலத்தில் பெருந்தொகையிலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பல வழி வகைகளை எதிர்காலத்தில் செயற்படுத்த உள்ளோம் என்றார்.
சமூக பொருளாதார கட்டமைப்பினை வலுப்படுத்தி இலங்கையில் நீதித்துறை எதிர்காலத்தில் பாரியதொரு மாற்றத்தினை எட்ட திட்டமிட்டுள்ளதாகவும் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்தார்.

