அக்கரைப்பற்றிலிருந்து அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டபிரதேசங்களுக்குபெருமளவுஉதவிகள்
(எஸ்.ரி.ஜமால்டீன்)
(எஸ்.ரி.ஜமால்டீன்)
அண்மையில்ஏற்பட்டவெள்ளப்பெருக்குமற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டமக்களுக்குவழங்குவதற்கு50 இலட்சம் ரூபாவுக்குமேற்பட்டபணம்,தேவையானபெருமளவுஉணவுப்பொருட்கள்,அத்தியாவசியப் பாவனைப்பொருட்கள் என்பனகொண்டுசெல்லப்படுவதாகஅக்கரைப்பற்று ஸக்காத் நிதியத்தின் தலைவர் பிரதிக் கல்விப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார்.
இப்பொருட்களில் பெருவாரியானவைகொழும்பைமையமாகக் கொண்டு இயங்கும் நிவாரணஒழுங்கமைப்புநிலையத்திற்கும் (சுஊஊ),பாதிக்கப்பட்டபிரதேசங்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டமக்களுக்குவழங்குவதற்காகஅவசியமானகுடிநீர் போத்தல்கள் சுமார் 4ஆயிரம் கிலோஅரிசி, 500 பெக்கேஜ் பால்மாவகை,சீனி 250 கிலோகிராம்,பிஸ்கட் 400 பக்கட்கள்,மீன்டின்,பருப்பு,பம்பஸ் மற்றும் சிறுபிள்ளைகளுக்கானபொருட்கள் செவ்வாய்க்கிழமை (24.5.2016)லொறிஒன்றில் கொண்டுசெல்லப்படுவதாகவும் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றுபள்ளிவாசல்கள்,உலமாக்கள், ஸக்காத் நிதியம்,அந்நூர் ஜமாஅதுஸ் ஸலாமாஉள்ளிட்டஇஸ்லாமிய தஃவாஅமைப்புக்கள் மற்றும் பொதுநிறுவனங்கள் என்பன இதற்கானநிதியுதவிகளைவழங்கியிருந்தனஎனவும் தெரிவித்தார்.
இதேவேளைஅனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டபிரதேசங்களுக்குவழங்குவதற்காகஅம்பாரைமாவட்டத்தில் உள்ளபிரதேசசெயலகங்களின் ஊடாகவும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டுஅம்பாரைமாவட்டஅரசாங்கஅதிபர் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுவருகின்றனஅதற்குஅமைவாகஅக்கரைப்பற்றுபிரதேசசெயலகத்தினாலும் சேகரிக்கப்பட்டநிவாரணபொருட்கள் அம்பாறைமாவட்டஅரசாங்கஅதிபர் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களும் மாவட்டஅரசாங்கஅதிபரூடாக ; கொண்டுசெல்லப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
