கிழக்கு மாகாணத்தில் அனைத்து கல்வி சாரா ஊழியர்களின் பதவி உயர்வுக்கான கோரிக்கைகள் மகாசபை பொதுக்கூட்டத்தில் முன்வைக்கப்படும் செயலாளர் ஏ.எம். ஜெமீல்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
கிழக்கு மாகாணத்தில் அனைத்து கல்வி சாரா ஊழியர்களின் பதவி உயர்வுக்கான கோரிக்கைகள் மகாசபை பொதுக்கூட்டத்தில் முன்வைக்கப்படும் என இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.
இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் (ளுசiடுயமெய ழேn யுஉயனநஅiஉ வுசயனந ருnழைn) 13 வது மகா சபைக் கூட்டம் முதன்முறையாக இவ்வருடம் கிழக்கு மாகாணத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் ஏ.எம். ஜெமீல் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் 28-05-2016 சனிக்கிழமை ஏறாவூர் அல்-ஜுப்ரியா வித்தியாலயத்தில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை நடைபெற இருக்கும் இம்மகா சபைக் கூட்டத்துக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் கே.பி.ஏ.கே. கருணாசேகர, மகாசபை உறுப்பினர்கள்;, மற்றும் கல்வி அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் அனைத்து கல்வி சாரா ஊழியர்களின் நூலகப் பணியாளர், ஆய்வு கூட உதவியாளர்கள், மற்றும் ஏனைய பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொள்ளல்.
அரச விடுமுறை தினங்களில் கடமை புரிந்தால் நாட்சம்பளத்தைப் பெறல்,
02ஃ 2013 சுற்று நிருபத்தின் பிரகாரம் அமைய, தற்காலிகமாக கடமையாற்றிய காலத்தை சேவையினுள் உள்வாங்கச் செய்வதற்கு சம்பளத்திலிருந்து 8 வீதத்தை மீளச் செலுத்தினால் மொத்த சேவைக் காலத்தில் உள்வாங்கப்படுதல்,
காவல் உத்தியோகத்தர்களுக்கான 67 வருட பழைய அநீதியான சுற்றுநிருபம் ஒன்று தற்காலத்தில் செயற்படுத்துவதை தவிர்த்து 9 மணித்தியால காவல் சேவையை வென்றெடுக்கும் போராட்டத்தைச் செயற்படுத்தல் போன்ற ஏனைய விடயங்களும் இந்தக் கூட்டத்தில் கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கின்றன.
இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தில் நாடளாவிய ரீதியாதாக சுமார் 4800 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 400 இற்கு மேற்பட்டோரும் அங்கத்தவர்களாக உள்ளார்கள்.