பலாங்கொடையில் மண்சரிவு ஆபத்து - 70 பேர் வௌியேற்றம்




பலாங்கொடை - பெட்டிகலகந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 70 பேர் வரை அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர். 

சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களே இவ்வாறு வௌியேற்றப்பட்டுள்ளதாக, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திர குறிப்பிட்டுள்ளார். 

கட்டட ஆய்வு நிலைய அதிகாரிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று மேற்கொண்ட பரிசோதனைகளின் பிரகாரம், அங்கு மண்சரிவு ஆபத்து இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். 

இதனையடுத்தே, குறித்த மக்களை தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பந்துல ஹரிச்சந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.