கச்சதீவு தேவாலயப் பணிகள் மழையினாலேயே இடை நிறுத்தம்- கடற்படை தளபதி



கச்சதீவில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிறிஸ்தவ தேவாலயத்தின் நிர்மாணப்பணிகள் பெய்துவரும் அடை மழையினாலேயே இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் தலையீட்டின் காரணமாக அல்ல எனவும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
மழை முடிவடைந்தவுடன் அதன் நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். கச்சதீவு இலங்கையின் ஒரு பிரதேசம். இதில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப்பணிகளை தடை செய்ய இந்தியாவுக்கோ வேறு நாடுகளுக்கோ முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.