இந்தியாவின் எதிர்ப்பு- கச்சதீவு தேவாலய நிர்மாணப் பணிகள் நிறுத்தம்



இந்தியாவின் எதிர்ப்பினால் இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிறிஸ்தவ தேவாலயத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கச்சதீவில் இராணுவ முகாமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், இது சட்ட விரோதமானது எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சினால் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தினுாடாக வெளியிடப்பட்ட அறிவித்தலின் பின்னர் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த புதின அந்தோனியார் புதிய தேவாலயத்தின் நிர்மாணப்பணிகள் யாழ். ஆயா் பேர்னாட் ஞானப்பிரகாசத்தின் வேண்டுகொளின் பேரிலேயே கடற் படையினரால் முன்னெடுக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
இருப்பினும், கச்சதீவில் கடற்படை முகாம் அமைக்கப்படுவதாக இந்தியாவினால் கூறப்படும் குற்றச்சாட்டை கடற்படையினர் முற்றாக மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கச்சதீவு 1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு உரிமையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  இத்தீவு யாழ் மாவட்டத்துக்கும் நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கும் உரித்துடையதாக்கப்பட்டுள்ளது.