பனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன?



'மோசக் பொன்சிகா'என்ற சட்ட நிறுவனம், சர்வதேச அளவில் இந்த மோசடியை செய்து வருகிறது. பனாமா நாட்டில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து இந்த மோசடி குறித்த ஆவணங்கள் வெளியான தால், பனாமா பேப்பர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.அடையாளம் தெரியாத ஒருவர் அளித்த இந்த ஆவணங்கள், முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகைக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, சர்வதேச புலன் விசாரணை பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து, கடந்த எட்டு மாதங்களாக ஆய்வு செய்து பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.கடந்த, 40 ஆண்டுகளாக, உலகெங்கும், 2.14 லட்சம் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள்குறித்த விவரம்வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகளில் வரிச்சலுகை கிடைப்பதால், அந்நாட்டு வங்கிகளில் பலர் முதலீடு செய்து வந்தனர்; குறிப்பாக கறுப்புப் பணம், இவ்வாறு பதுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், போலியான பெயரில் நிறுவனங்களை உருவாக்கி அதில் முதலீடு செய்வது, போன்ற மோசடி நடக்கிறது. மத்திய அமெரிக்க நாடான பனாமாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'மோசக் பொன்சிகா' என்ற சட்ட நிறுவனம், இதுபோன்ற மோசடியை மிகப்பெரிய அளவில் செய்து வருவது தற்போது அம்பலமாகி உள்ளது. இந்த நிறுவனத்துக்கு, உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளன. 
ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி, போலியான பெயரில் உள்ள நிறுவனத்தின் இயக்குனராக பதிவு செய்து கொள்ளலாம். அந்த நிறுவனத்தின் பெயரில் வங்கிகளில் பணத்தை முதலீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பணத்தை பதுக்கி வைத்துக் கொள்ள, இந்த நிறுவனம் உதவி வருகிறது.

இந்தியர்கள் யார் யார்?
*அமிதாப் பச்சன், பாலிவுட் நடிகர் *ஐஸ்வர்யா பச்சன், பாலிவுட் நடிகை *டி.எல்.எப்., குழுமத் தலைவர் கே.பி.சிங் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர்*அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி*'இண்டியாபுல்ஸ்' நிறுவன தலைவர் சமீர் குலாடி*'அப்பல்லோ டயர்ஸ்' தலைவர் ஓன்கார் கன்வர்*லோக்சத்தா கட்சித் தலைவர் அனுராக் கெஜ்ரிவால்*மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே*முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியின் மகனும், பிரபல டாக்டருமான ஜகாங்கீர் சோலி சொராப்ஜி*தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மல்லிகா ஸ்ரீனிவாசன்