களனி கங்கை, அத்தனகளு ஓய மற்றும் களு கங்கையில் வௌ்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய பகுதிகளிலிருந்து மக்களை வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆறுகளின் நீர் மட்டம் துரிதமாக அதிகரிப்பதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்
நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் நாடளாவிய ரீதியில் 5,196 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
பாதிக்கப்பட்டவர்கள் 32 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மேலும் நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்தால் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ளவர்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் 7 வீடுகள் முழுமையாகவும் 111 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

