சொகுசு வாகனத்துக்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றுத் தருவதாக கூறி, நபரொருவரிடம் இருந்து 54 இலட்சம் ரூபாவைப் பெற்று ஏமாற்றியதாக, குற்றம்சாட்டி அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, நீதிபதி ஜே.ஏ.ஆர்.ஹெய்யன்துடுவ முன்னிலையில் பிரதிவாதியான பாலித்த ரங்கே பண்டாரவுக்கு குற்றப் பத்திரிகை வழங்கப்பட்டதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த வழக்கை செப்டம்பர் 6ம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதி தீர்மானித்துள்ளார்.