போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விமல் வீரவன்ஸவின் மனைவி சசி வீரவன்ஸவிற்கு எதிரான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதன்போது குறித்த வழக்கு தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
இதற்கிடையில் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் ப்ரியத் பந்து விக்ரம உள்ளிட்ட மூவரை நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

