சாகும் வரை உண்ணாவிரதம்-குப்பைப் பிரச்சினை



அம்புளுவாவ மலைப்பிரதேசத்தில் கம்பொளை நகர சபையின் குப்பை கூலங்களை கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடாத்தப்பட்டு வரும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாகவும் இன்றும் இடம்பெற்றது.
இந்த போராட்டம் கம்பொல – ஹெம்மாதகம குப்பை கூலங்களை ஏற்றிச் செல்லும் டிரக்டர் வண்டிகள் பயணிக்கும் பாதையில் இடம்பெற்று வருகின்றது.
இதனை, அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.