உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஆசிய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளன.டைம்ஸின் உயர் கல்வி உலக தரவரிசைப்படுத்தலில் இந்த ஆண்டின் முதல் 100 இடங்களில் 17 இடங்களை ஆசியப் பல்கலைக்கழங்கள் பிடித்துள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சீனப் பல்கலைக்கழகம் ஒன்று முதல் தடவையாக முதல் 20 பல்கலைக்கழங்களுள் இடம்பிடித்துள்ளது.
பீஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகம் பட்டியலில் 18 ஆவது இடத்தில் உள்ளது.
பிரித்தானியப் பல்கலைக்கழங்களான கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் ஆகியவை முதல் ஐந்து இடங்களுள் உள்ளன.
ஹார்வர்ட் முதல் இடத்தை பிடித்துள்ளதுடன் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதலிடங்களில் தொடர்ந்தும் ஆதிகம் செலுத்துகின்றன.

